முல்லைத்தீவு துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள நான்கு குளங்கள் இவ்வாண்டு உலக உணவு திட்டத்தின் கீழ் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுப்பு
முல்லைத்தீவு துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள நான்கு குளங்கள் இவ்வாண்டு உலக உணவு திட்டத்தின் கீழ் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பெரும் பாக உத்தியோகத்தர் த. பிரியதர்சினி தெரிவித்துள்ளார்முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழ் பாவனையிலுள்ள பதினாறு குளங்களிலும் பல்வேறு அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.உலக உணவுத் திட்டத்தின் கீழ் நான்கு குளங்கள் இவ்வாண்டு தெரிவுசெய்யப்பட்டு அவற்றுக்கான அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக துணுக்காய் கம நலசேவை நிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்அதாவது துணுக்காய் குளத்தின் கீழ் 10 லட்சத்து 9 ஆயிரம் ரூபா செலவிலும் முருங்கன் குளத்தின் கீழ் 28 லட்சத்து 87 ஆயிரம் ரூபா செலவிலும் கீழ் குளத்தின் கீழ் 14 லட்சத்து 19 ஆயிரம் ரூபா செலவிலும் அனிஞ்சியன் குளத்தின் கீழ் 16இலட்சத்து ஏழாயிரம் ரூபா செலவிலும் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதேவேளை துணுக்காய் குளத்தில் 1837 மனித நாட்களும் கீழ் குளத்தில் 1463 மனித நாட்களும் முருங்கன் குளத்தின் கீழ் 858 மனித நாட்களும் அனிஞ்சியன் குளத்தின் கீழ் 1294 மனித நாட்களும் என மனித நாள் வேலைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.