துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழ் 550 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுதானிய செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கமநல சேவை தெரிவிப்பு
முல்லைத்தீவு துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழ் 550 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுதானிய செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கமநல சேவை நிலையத்தின் பெரும் பாக உத்தியோகத்தர் த. பிரியதர்சினி தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள பாரிய மற்றம் நடுத்தர குளங்களின் இவ்வாண்டு 2778 ஏக்கர் நிலப்பரப்பிலும் அதேபோல சிறு குளங்களின் 154 ஏக்கர் நிலப்பரப்பிலும் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள அதேநேரம் 550 ஏக்கர் நிலப்பரப்பில சிறுதானியத்தை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கமநல சேவை நிலையத்தின் பெரும் பாக உத்தியோகத்தர் த. பிரியதர்சினி தெரிவித்துள்ளார்.கல்விளான் யோகபுரம் கிழக்கு யோகபுரம் மத்தி துணுக்காய் தேறாங்கண்டல் ஆலங்குளம் ஐயன்குளம் ஆகிய பகுதிக்ளில் நிலக்கடலை உழுந்து பயறு கௌப்பி போன்ற பயிர்கள் இவ்வாறு பயிரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.