வடகாடு கிராமத்தில் தொழில் வாய்ப்பின்மை மற்றும் வறுமை காரணமாக ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கிராம மட்ட அமைப்புக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வடகாடு கிராமத்தில் தொழில் வாய்ப்பின்மை மற்றும் வறுமை காரணமாக ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கிராம மட்ட அமைப்புக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வடகாடு கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் தற்போது வாழ்ந்து வருகின்ற நிலையில் குறித்த கிராமத்தில் வாழும் அதிகளான குடும்பங்கள் தினக்கூலி செய்து வருகின்ற குடும்பங்களாகவே காணப்படுகின்றன.இந்த நிலையில் தற்போதைய கொறோனா அச்சுறுத்தல் காரணமாக பெருமளவான குடும்பங்கள் தொழில் வாய்ப்புகளை இழந்திருக்கின்றனஅதாவது தனியார் வர்த்தக நிலையங்கள் மற்றும் பல்வேறு இடங்களிலும் நாளாந்த வேலை செய்து வந்தவர்கள் தற்போதைய நெருக்கடிகளால் அந்த தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளனர்.அதேபோல குறித்த கிராமத்தில் இருந்து அதிகளவான குடும்பங்கள் மீன்பிடி மற்றும் விறகு வியாபாரம் போன்ற தொழில்களை முன்னெடுத்து வருகின்றன.இந்த நிலையில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் முதியோர் குடும்பங்கள் தற்போதைய சூழலில் பல்வேறு கஷ்டங்களையும் எதிர்கொள்வதாக இந்த பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.