சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  678 news
  •  ·  17 friends
  • S

    24 followers

குடிநீர் வினியோகத்னை முறையாக மேற்கொள்ளாத புதுக்குடியிருப்பு பிரதேச சபை பல குடும்பங்கள் போத்தலில் அடைக்கப்பட்ட நீரை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குடிநீர் வினியோகத்னை முறையாக மேற்கொள்ளாத புதுக்குடியிருப்பு பிரதேச சபை தொடர்பில் மக்கள் விசனம் வெளியிடுகின்றனர். முல்லைதீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இந்துபுரம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள செல்வபுரம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக வடக்கு மாகாண சைபையினால் பல மில்லியன் ரூபா செலவில் நீர்தாங்கி ஒன்று அமைக்கப்பட்டது.கடந்த 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குறித்த நீர்த்தாங்கியின் மூலம் அப்பகுதியில் உள்ள 300 க்கு மேற்பட்ட குடும்பங்களிற்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொடுக்க முடியும் என தெரிவித்து குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் நேரடி கண்காணிப்பின் கீழ் நிர்மானிக்கப்பட்ட குறித்த நீர் வினியோக திட்டத்திற்கான அபிவிருத்தி பணிகள் 2017ம் ஆண்டு நிறைவு செய்யப்பட்டு முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசா, முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரால் முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் பிறேமகாந்தனிடம் கையளிக்கப்பட்டது.கையளிக்கப்பட்ட சிறிய காலம் குடிநீர் வினியோகம் இடம்பெற்ற போதிலும், 6 மாதங்களிற்கு பின்னர் அத்திட்டம் செயலிழந்து போனது. மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் இவ்வாறு செயலிழந்து காட்சிப்பொருளாகவே காணப்படுகின்றது.இந்த நிலையில் குறித்த பகுதி மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அலைந்து திரிவதுடன், பல குடும்பங்கள் போத்தலில் அடைக்கப்பட்ட நீரை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.குறித்த நீர் வினியோக திட்டம் அடைநடுவில் கைவிடப்பட்டமை தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயலாளர் கிருசாந்தனிடம் வினவியபொழுது,குறித்த திட்டம் தமது கண்காணிப்பின் கீழ்தான் இடம்பெற்றதாகவும், பிரதேசத்தின் சனசமூக நிலையத்திடம் குறித்ததிட்டம் கையளிக்கப்பட்டதாகவும், ஆனாலும் நீர் வினியோகம் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.ஆனாலும், கடந்த வருடங்களில் இடையிடையே ஒரு மணிநேரம் குறிநீர் வினியுாகம் இடம்பெற்றதாகவும், கடந்த வருடத்திலிருந்து இன்று வரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீர் வினியோகம் இடம்பெறவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். மக்களின் கருத்துக்களுக்கு குறித்த திட்டம் நீண்ட காலமாக இடம்பெறவில்லை என்பதற்கு அங்கு பொருத்தப்பட்டுள்ள நீர் குழாய்கள் மற்றும், பாவணை கிணற்றின் நிலை சான்று பகிர்கின்றது.குறித்த நீர் வினியோக திட்டத்திற்காக அமைக்கப்பட்ட பிரதான நீர் குழாய்கள் உள்ளக போக்குவரத்து வீதிகளின் மையப்பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளதாகவும், தற்பொழுது வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளமையால் புதைக்கப்பட்ட நீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள கசிவுகளை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவு்ம, அதனை கட்டுப்படுத்த முயற்சித்தால் வீதியின் மைய பகுதிகளை மீண்டும் கிளற வேண்டிய நிலை ஏற்பட்டால்பாரிய நிதி செலவு ஏற்படும் என்பதால் திருத்தல் பணிகளை முன்னெடுக்க பிரதேச சபையினர் தயக்கம் காட்டி வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.பிரதான நீர்க்குழாய்கள் பொருத்தப்படும்போது வீதி அமைவிடத்துக்கு வெளிப்பகுதியிலேயே பொருத்தப்பட வேண்டும் என்பதுடன், திருத்தல் பணிக்கான அவசியம் ஏற்படும்போது அதனை மேற்கொள்ளக்கூடியதாகவும் அமையப்பெற வேண்டும். மாறாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரின் நேரடி கண்காணிப்பில் இடம்பெற்ற குறித்த முறையற்ற செயற்பாட்டினால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறான முறையற்ற செயற்பாடு தொடர்பில் பல்வேறு தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்ற பொழுதிலும் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அன்று பிரதேச சபையினர் விட்ட பாரிய தவறு காரணமாக இன்று மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.குறித்த விடயம் செல்வபுரம் மத்திய வீதி, 3ம் மற்றும் 4ம் வீதிகளில் இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த நீர்குழாய் அமைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிக்ள மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.இதேவேளை தமது குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத்தர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வே்ணடும் எனவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

  • 599
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads