52 பேர் குறித்த அனுமதியை கோரி உள்ள நிலையில் 7 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதுடன் அட்டைப் பண்ணைக்கான பணி ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது.
பூநகரி பகுதியில் அமைந்துள்ள இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாணத்திற்கான பிராந்திய அலுவலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற நிகழ்விலையே குறித்த அனுமதி வழங்கிவைக்கப்பட்டது52 பேர் குறித்த அனுமதியை கோரி உள்ள நிலையில் 7 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதுடன் எதிர்வரும் திங்கட்கிழமை அட்டைப் பண்ணைக்கான பணி ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது. இதில் அனுமதிக்கு கோரிய 52 பேரும் அட்டைப்பண்னைக்குரிய பணிகள் ஆரம்பிக்க முடியும் மிகுதியானவர்களுக்கு அனுமதி விரைவில் வழங்கப்படும் அனுமதி இல்லை என்பதற்காக அட்டைப் பண்ணையினை ஆரம்பிக்காமல் இருக்க வேண்டாம் என அமைச்சர் தெரிவித்தார். அதனை விட குறித்த பகுதியில் சீன நிறுவனத்தால் நடத்தப்படும் அட்டைப் பண்ணைக்கான அனுமதி கௌதாரி முனை விநாயகர் கடற்றொழில் சங்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு சீன நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்இன் நிகழ்வில் இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாண உதவிப் பணிப்பாளர்பி.நிருபராஜ் பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரன் மற்றும் துறைசார் அதிகாரிகள் மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.