சுமார் 4.5 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியில் அமைத்து பலநோக்கு கூட்டுறவுச் சங்க அரிசி ஆலை ஏழு ஆண்டுகளுக்கு மேலாக பூட்டப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது.
முல்லைத்தீவு துணுக்காய் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு சுமார் 4.5 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியில் அமைத்து பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திடம் கையளிக்கப்பட்ட அரிசி ஆலை கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக பூட்டப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது.
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள துணுக்காய் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கான அரிசி ஆலை கடந்த காலங்களில் மிகச் சிறப்பாக செயற்பட்ட அரிசியாலையாகவும் இந்த பிரதேசத்திலேயே விளைவிக்கப்படுகின்ற நெல்லின் பெரும் பகுதியை கொள்வனவு செய்து அவற்றை அரிசியாக்கி ஏற்றுமதி செய்வதில் பெரும் பங்கை வகித்த ஒரு அரிசியாலையாகும்.
கடந்த யுத்தம் காரணமாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் அரிசி ஆலை மற்றும் அதன் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு மக்கள் மீள்குடியேறியதையடுத்து அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் நிதி பங்களிப்புடன் சுமார் 4.5 மில்லியன் ரூபா செலவில் துணுக்காய் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கான அரிசி ஆலை புனரமைக்கப்பட்டு அதற்கான இயந்திரங்களும் வழங்கப்பட்டன.இதனை பொறுப்பேற்றுக் கொண்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் அதனை இயங்க வைக்காது கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக மூடிய நிலையிலேயே காணப்படுகின்றது.
குறிப்பாக இவ்வாலை இயங்கும்போது பெருமளவான அரிசியை உற்பத்தி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீள் குடியேற்றப் பிரதேசங்களின் அபிவிருத்தி மக்களின் வாழ்வாதாரம் என்பவற்றை மையப்படுத்தி பெருந்தொகை நிதியை செலவழித்து இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும் இந்த அரிசியாலைனது செயலற்று கிடப்பது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.