முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் விவசாய காணிகள் இன்றி வாழும் 75 வரையான குடும்பங்களுக்கு காணிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு துணுக்காய் பகுதியில் காணிகள் அற்ற குடும்பங்களுக்கு குடியிருப்பு காணிகள் வழங்கப்பட்டு குடியமர்த்தப்பட்டுள்ள போதும் குறித்த குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்குரிய வயல் காணிகள் இதுவரை வழங்கப்படவில்லை எனவே தமக்கான வயல் காணிகளை பெற்றுத்தருமாறு கோரியுள்ளனர்.
அதாவது தமது பகுதிக்கு அண்மையாக உள்ள காஞ்சுரங்குளத்தினை புனரமைத்து அதன் கீழ் உள்ள வயல் காணிகளை வழங்குமாறுகோரியுள்ளனர்.
குறித்த குளத்தின் கீழான வயல் காணிகளை தங்களுக்கு வழங்குமாறு தொடர்ச்சியாக கோரி வருகின்றபோதும், இதுவரை வழங்கப்படவில்லை என்றும் இதனால் தமது வாழ்வாதாரமான விவசாயத்தை மேற்கொள்ள முடியாதுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேற்படி கிராமத்தில் உள்ள 75 வரையான குடும்பங்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருவதனால் அதனை முன்னெடுப்பதற்கான சொந்தக்காணிகள் எதுவுமில்லை எனவும் இதனால் தாங்கள் தொடர்ந்தும் கஷ்டங்களை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளதுடன், தமக்கான வயல் காணிகளை பெற்றுத்தருமாறு கோரியுள்ளனர்.