சினிமா செய்திகள்
மகனிடம் இருந்து  கற்றுக் கொண்டேன் - ஜெனிலியா
தமிழில் ஜெனிலியா சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றார். இந்த படங்கள் இவருக்கு சினிமாவில
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர் யார் தெரியுமா?
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் இந்த பட்டியலில் முதல் இடத்தில் விஜய் இருந்தார். ஆனால், தற்போது வி
தனது வருங்கால கணவர் யார் என வெளிப்படையாக கூறினார் ராஷ்மிகா
புஷ்பா 2 படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகாவிடம் தொகுப்பாளினி, ‘நீங்கள் சினிமாத்துறையில் உள்ளவரை திருமணம் செய்துக் கொள்வீர்களா? அல்லது சி
ராஷ்மிகா தனது காதலர் உடன் ஹோட்டலில் சாப்பிடும் போட்டோ வைரல்
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு ஹிந்தியில் அதிகம் ரசிகர்கள
சிவகார்த்திகேயன் மிகவும் திறமையானவர் என தெரிவித்த ரம்யாகிருஷ்ணன்
அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது. உலக அளவில் அமரன் படம் ரூ. 300 கோடி அளவில் வசூல் செய்துள்ளது.சிவக
பொய்யான தகவல்கள் பகிர்வதை தவிர்க்கவும் - ஏஆர்.ரஹ்மான் மகன்
ஏஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்த செய்திகள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.சமூக வலைதளங்களில் இந்த
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்துக்கான காரணத்தை சொன்ன வக்கீல்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹாலிவுட் வரை கொடிக்கட்டி பறப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் கடந்த 1995ம் ஆண்டில் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய
பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் கூறிய தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா
கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடந்த நிலையில், இருவரும் பிரிவதாக முடிவெடுத்து, நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.  
 ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். இதனையடுத்து இந்திய திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இரு
சிறையில் தூக்கமின்றி தவிக்கிறார் நடிகை கஸ்தூரி
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, முதல் நாளில் தூக்கமின்றி தவித்ததாக சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவையும் குறைந
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸானது நயன்தாராவின் கல்யாண கேசட்
இயக்குர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ ஒரு ஆவணப்படமாக உருவாக
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், திரு தனுஷ், பல தவறான விஷயங்களை நேர்மையாக சரி செய்வதற்காக இந்த
Ads
 ·   ·  678 news
  •  ·  16 friends
  • S

    23 followers

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறை காரணமாக தமது வாழ்வாதாரம் மோசமாகப் பாதிப்பு - யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள்

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறை காரணமாக தமது வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றமையினால், எந்த வழியிலேனும் இந்தியக் கடற்றொழிலாளர்ககளை கட்டுப்படுத்துமாறு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் வலியுறுத்தினர்.மேலும் கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களுக்கு இரண்டு கோடி 13 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் நஸ்டத்தினை இந்தியக் கடற்றொழிலாளர்கள் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.யாழ். மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர் சமாசங்கள் மற்றும் கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் (08.08.2021) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற் குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் உட்பட தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை கட்டுப்படுத்துமாறு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களினால் தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்றைய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.யாழ். மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர் சமாசங்கள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில்,இந்தியக் கடற்றொழிலார்களின் அத்துமீறல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.மேலும், சுருக்கு வலை, உள்ளூர் இழுவைப் படகு, வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல், குழை போட்டு மீன் பிடித்தல் போன்ற சட்ட விரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற கருத்தினையும் கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் முன்வைத்தனர்.மேலும், புரெவிப் புயலால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு நஸ்ட ஈட்டினைப் பெற்றுத் தருமாறும், நீதிமன்றத்தின் ஊடாக அரசுடமையாக்கப்பட்ட இந்தியக் கடற்றொழிலாளர்களின் படகுகளை விற்பனை செய்து, கிடைக்கின்ற பணத்தினை யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்குமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழல் அமைச்சர், கடல் தொழில் நடவடிக்ககளை நாடளாவிய ரீதியில் ஒழுங்குபடுத்தும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஒழுங்கு விதிகளில், யாழ். மாவட்டத்தில் மூன்றரை இஞ்சி வலையைப் பயன்படுத்தி 16 கடல் மைல்களுக்கு அப்பால் சுருக்கு வலை தொழிலில் ஈடுபட அனுமதியளிப்பது தொடர்பாக பிரஸ்தாபித்தார்.அதேபோன்று, இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோதச் செயற்பாடுகளுக்கு இன்னும் சில மாதங்களில் நிரந்தரமான தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தனியார் கடலட்டை ஏற்றுமதியாளர் ஒருவரின் ஒத்துழைப்புடன் பிரதேச மக்கள் நன்மைகளை பெற்றுக் கொள்ளும் வகையிலான நிபந்தனைகளுடன் கடலட்டை பிடிப்பதற்கான அனுமதியை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.அதேபோன்று, 2017 ஆம் ஆண்டில் இருந்து உள்ளூர் இழுவைப் படகு தடை செய்யப்பட்டுள்ள போதிலும், நாரா எனப்படும் தேசிய நீரியல்வள அபிவிருத்தி ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் மாத்திரம் உள்ளூர் இழுவை வலைப் படகு தொழிலில் தற்காலிகமாக ஈடுபட முடியும் என்றும் மீறுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இறுக்கமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும், கடற்றொழிலாளர் சமாசங்கள் மற்றும் சங்கங்களின் பூரணமான ஒத்துழைப்புக் கிடைக்குமாயின் வெளிச்சம் பாய்ச்சுதல் மற்றும் குழை போட்டு கணவாய் பிடித்தல் போன்ற சட்ட விரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.அதேவேளை, கடற்றொழில் சங்கங்களின் பொருளாதார சிக்கல்களுக்குத் தீர்வாக, பண்ணை முறையில் கடலட்டை, மீன், நண்டு மற்றும் இறால் வளர்ப்பில் ஈடுபடுவதற்கு விரும்புமாயின் ஒவ்வொரு சங்கத்திற்கும் தலா பத்து ஏக்கர்களை ஒதுக்கித் தருவதாக உறுதியளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆழ்கடல் பலநாள் மீன்பிடித் தொழில் தொடர்பான பயிற்சிகளை பெற்றுக் கொள்ள விரும்பகின்றவர்கள் தொடர்பான விபரங்களைத் தருமாறும் கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • 570
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads