பிரதேச சபைக்கு சொந்தமான வீதிகளை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு முள்ளியவளை மற்றும் வற்றாப்பளை ஆகிய கிராமங்களில் மிகவும் மோசமான நிலையில் காணப்படும் பிரதேச சபைக்கு சொந்தமான வீதிகளை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் காணப்படுகின்ற பிரதேச சபைக்குச் சொந்தமான வீதிகள் நீண்டகாலம் புனரமைக்க படாத நிலையில் சில வீதிகள் போக்கு வரத்துக்களுக்கு பயன்படுத்த முடியாத நிலையிலும் காணப்படுகின்றனகுறிப்பாக பிரதேச சபைக்குச் சொந்தமான வீதிகள் அதன் அளவுகளை விட குறுகிய வீதிகளும் அகலம் குறைந்த வீதிகளாகவும் காணப்படுகின்றன என்றும் குறித்த பிரதேச சபைக்குச் சொந்தமான வீதிகளை புனரமைப்பதற்கு அல்லது வீதிகளை அடையாளப்படுத்தி எல்லையிடுவதற்கு பிரதேச சபை இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்று பிரதேச பொது அமைப்புகளும் பிரதேச மக்களும் சுட்டிக் காட்டியுள்ளனர்.குறிப்பாக முள்ளியவளை பிரதேசத்தில் அனேகமான வீதிகள் வெள்ள நீர் வழிந்தோடி வாய்க்கால்களாகவே காணப்படுகின்றன கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக எந்தவித புனரமைப்புக்களுமின்றி பல வீதிகள் காணப்படுவதாகவும் கிராம மட்ட அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளனஇந்த விடயம் தொடர்பில் பிரதேச சபையிடம் பிரதேச சபை தவிசாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது குறித்த பிரதேச சபையின் கீழ் 504.315கிலோமீட்டர் நீளமானஆயிரத்து 103 வரையான வீதிகள் காணப்படுகின்றன இதில் எத்தனை வீதிகள் எவ்வளவு தூரம் புனரமைக்கப்பட்டடுள்ளன என்ற விபரங்கள் தனக்கு தெரியாது குறித்த விபரங்களை திரட்டி தருவதாக பிரதேச சபையின தவிசாளர் தெரிவிள்ளார்.