கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட அல்லபை்பளை கிராமம் சட்விரோத மணல் அகழ்வுகளால் அழிவடையும் அபாய நிலை காணப்படுவதாக விவசாய அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அல்லிப்பளை கிராமத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுஅதாவது குறித்த பிரதேசத்தில் மிக ஆழமான குழிகள் வெட்டப்பட்டு மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் கடல்நீர் உட்புகும் அபாயநிலை காணப்படுகின்றது குறிப்பாக இந்தப் பிரதேசங்களில் காணப்படுகின்ற வயல் நிலங்கள் தோட்ட செய்கை நிலங்கள் அதைவிட அங்கே காணப்படுகின்ற தனியார் காணிகள் என்பவற்றில் நாளாந்தம் சட்டவிரோத மணல் அகழ்வில் மேற்கொள்ளப்படுகின்றனகுறிப்பாக இந்த பிரதேசத்திலேயே இடம்பெறுகின்ற மணல் அகழ்வுகளுக்கும் பொலிசாருக்கும் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாக பிரதேச மக்களும் சுட்டிக்காட்டி உள்ளனர். எனவே தங்களுடைய கிராமம் சட்விரோத மணல் அகழ்வால் அழியும் நிலை காணப்படுவதாகவும் தமது கிராமத்தை காக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.