குமதினி படகை ஒத்ததான நவீன வசதிகளுடன் கூடிய படகு பெற்றுத்தரப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!
எந்த சூழ்நிலையிலும் சேவையை முன்னெடுக்கும் ஆற்றலுள்ள குமுதினியைப் போன்று மற்றுமொரு படகு நவீன வசதிகளுடன் பெற்றுத்தரப்படும் – நெடுந்தீவு மக்களுக்கு அமைச்சர் தலைவர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!எந்த சூழ்நிலையிலும் நெடுந்தீவின் கடற்பரப்பில் மக்களுக்கான போக்குவரத்து பணியை முன்னெடுக்கும் ஆற்றல் கொண்ட குமுதினி படகைப்போன்ற மற்றுமொரு படகை கட்டுமாணம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார் கடற்றொழல் அமைச்சர் தலைவர் டக்ளஸ் தேவானந்தா.இது தொடர்பில் அமைச்சர் தெரிவித்ததாவது..நெடுந்தீவு குறிகாட்டுவான் கடற்பரப்புக்கு ஏற்ற ஏதுநிலைகளுடன் கூடிய சேவையை செய்யும் குமுதினி படகை ஒத்த நவீன வசதிகளுடன் கூடிய படகினை கட்டுமாணம் செய்வதே இப்பகுதியின் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்பது எனது நீண்டகால விருப்பம். இதை இப்பிரதேசத்தின் முன்னாள் தவிசாளர் அமரர் அரியநாயகமும் என்னிடம் பலமுறை வலியுறுத்தியிருந்தார். அந்தவகையில் விரைவில் துறைசார் தரப்பினருடன் பேசி குமதினி படகை ஒத்ததான நவீன வசதிகளுடன் கூடிய படகொன்றை கட்டுமாணம் செய்து தருவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளேன் என அமைச்சர் தலைவர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்தார் .