முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆரோக்கியபுரம் கிராமத்தில் குடிநீர் இன்மை காரணமாக பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக மேற்படி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காப்பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள ஆரோக்கியபுரம் கிராமத்தில் தற்போதைய வறட்சி நிலை காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி கிராமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கான குடிநீரைப்பெற்றுக்கொள்வதில்; தினமும் சிரமங்;களை எதிர்கொண்டு வருவதாகவும் தமக்கு தேவையான குடிநீரை நீண்ட தூரங்களுக்கு சென்று கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் பகுதியில் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லையோரத்திலும் துணுக்காய் பிரதேசத்தின் பின்தங்கிய பகுதியிலும் குறித்த கிராமம் அமைந்துள்ள நிலையில் தமது பகுதிகள் தொடர்பில் ; அதிகாரிகள் அரசியல்வாதிகள் அக்கறை கொள்வதில்லை என்றும் வருடாந்தம் குறிப்பிட்ட ஒரு சில மாதங்களை தவிர ஏனைய காலங்களில் இவ்வாறு குடிநீர் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.