Category:
Created:
Updated:
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தொழில் நிமித்தமாக சென்று பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளான 266 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானமொன்றில் இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்களில் அதிகமானவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வீட்டுப் பணிப்பெண்களாக சென்றிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர் இலங்கை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நடைமுறைகளுக்காக அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.