முல்லைத்தீவு மாவட்டத்தில் 836 கெக்ரேயர் நிலப்பரப்பு பயிர் செய்கை மேற்கொள்ளமுடியாத உவர் நிலப்பகுதிகளாக காணப்படுவதாக விவசாய திணைக்களம் தெரிவிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் 836 கெக்ரேயர் நிலப்பரப்பு பயிர் செய்கை மேற்கொள்ளமுடியாத உவர் நிலப்பகுதிகளாக காணப்படுவதாக மாவட்ட விவசாய திணைக்களத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் நாயாறு மற்றும் நந்திக்கடலை அண்டிய பகுதிகளிலும் ஏனைய பிரதேசங்களில் விளைநிலங்கள் அதிகளவில் உவர் தன்மையுடன் காணப்படுவதாகவும் இதனால் தமது விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, நந்திக்கடலை அண்டிய கரையோரப்பகுதிகளில் மழைகாலங்களில் அதிக நீர்தேங்குதல் மற்றும் கடல் நீர் உட்புகுதலால் தமது வயல் நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கரையோரங்களில் காணப்படும் சேதமடைந்த உவர் நீர்த்தடுப்பணைகளை அமைத்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 836 கெக்ரேயர் நிலப்பரப்பு அதிகூடிய உவர் தன்மையான பயிர் செய்கை மேற்கொள்ளமுடியாத பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. என மாவட்ட விவசாய திணைக்களத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவைதவிர, கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் போன்றபகுதிகளில் அதிகளவான பகுதிகள் இவ்வாறு காணப்படுவதாகவும் விவசாயத்திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.