பழைய மாணவர் குழுவினரால் வழங்கப்பட்ட நிதியுதவியில் 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மொரட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியில் '1983 முதல் 1987' இன் பழைய மாணவர் குழுவினரால் வழங்கப்பட்ட நிதியுதவியில்100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு சேனைபிலவு பரசங்குளம் மற்றும் விளாத்திகுளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் வாழ்வாதாரத்தால் பின் தங்கிய குடும்பங்கள் மற்றும் கொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.இந்த திட்டமானது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டாரவின் பங்கேற்புடன் 56 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில அவர்களின் முன்மொழிக்கு அமைய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் நன்கொடையாளர்களின் பிரதிநிதிகள் 56 வது படைப்பிரிவு தளபதி 561 பிரிகேட் 562 மற்றும் 563 பிரிகேட்களின் தளபதிகள் சிவில் விவகார அதிகாரிகள் கட்டளை அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் விளாத்திகுளம் கிராம சேவகர் திரு எம் தனுஷன் ஆகியோர் இந்த நன்கொடை திட்டத்தில் கலந்து கொண்டனர்.