முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தில் கரும்புள்ளியான் கிராமத்தில் சௌபாக்கிய திட்ட வாழ்வாதார பயனாளிகள் தெரிவு தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.
மாந்தை கிழக்கு பிரதேசத்தில் சௌபாக்கிய திட்டத்தின் ஊடாக கால்நடை வளர்ப்போருக்கு ஒரு இலட்சம் ரூபா வாழ்வாதாரம் வழங்கிவைக்கப்படவுள்ளதாக கிராமத்தில் 26 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் வாழ்வாதாரத்தினை எதிர்பார்த்து காத்திருக்கும் ஏனைய மக்கள் , தெரிவு தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ளார்கள்.மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட கரும்புள்ளியான் கிராமத்தில் மக்களுக்கு வழங்கப்பட இருக்கும் வாழ்வாதார செயற்றிட்டம் ஒன்றிற்காக கிராம அலுவலரினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் தெரிவில், ஏற்கனவே கால்நடை வளர்ப்பில் பண்ணையாளர்களாக மேற்கொள்ளும் கால்நடை வளர்ப்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்MU/07 கிராம அலுவலர் பிரிவான கருப்புள்ளியான் கிராமத்தில் 154 குடும்பங்களில், வாழ்வாதாரத்தை எதிர்நோக்கி பல குடும்பங்கள் இருக்கும் இவ் வேளையில் கால்நடைவளர்ப்பாளர்களுக்கே கால்நடை உதவிகளை வாழ்வாதாரமாக வழங்குவது எவ்வாறு என மக்கள் கேள்வி எழுப்பினர்.26 பயனாளிகளில் 6 பயனாளிகள் பண்ணையாளர்களாக தற்போது கால்நடை வளர்ப்பினை மேற்கொண்டு வருவதுடன் ஏற்கனவே வாழ்வாதாரம் வழங்கியவர்களையும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வாழ்வாதாரத்தினை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன்இந்த வாழ்வாதார தெரிவு தொடர்பில் பிரதேச செயலாளர் கவனத்தில் கொண்டு சரியான பயனாளிகளை தெரிவு செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.