முரசுமோட்டை கமக்கார அமைப்பினது கணக்காய்வுகளில் பல்வேறு பட்ட ஐயப்பாடுகள் தொடர்பில் பதில்கள் இதுவரை வழங்கப்படவில்லை - கிளிநொச்சி கமநல சேவை
கிளிநொச்சி முரசுமோட்டை கமக்கார அமைப்பினது கணக்கறிக்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்காய்வுகளில் பல்வேறு பட்ட ஐயப்பாடுகள் தொடர்பில் விளக்கங்கள் கோரப்பட்டுள்ள போதும் இதுவரை அதற்கான பதில்கள் இதுவரை வழங்கப்படவில்லையென கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் பெரும் பாக உத்தியோகத்தர் ந. சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்03-08-2021 நடைபெற்ற கிளிநொச்சி முரசுமோட்டை கமக்கார அமைப்பினது பொதுக்கூட்டத்தில் கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் பெரும் பாக உத்தியோகத்தர் கலந்து கொண்டு விவசாயிகள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்முரசுமோட்டை கமக்கார அமைப்பின் கடந்தகால கணக்கறிக்கை இன்றைய தினம் பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது இதன்போது குறித்த கணக்கறிக்கை தொடர்பில் விவசாயிககால் பல்வேறு ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. அதாவது குறித்த அறிக்கையானது தலைவர் பொருளாளர் ஆகிய இருவருமே கையொப்பமிட்டு இருக்கின்றமை மற்றும் கணக்காய்வாளர் ஒருவரால் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வெறுமனே அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுஎன்றும் கணக்காய்வு அல்லது திணைக்கள ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் விவசாயிகளால் முன்வைக்கப்பட்டன.இதனையடுத்து பெரும்பாக உத்தியோகத்தர் கருத்து தெரிவிக்கும் போது குறித்த அமைப்பின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று இருக்கின்றன இதனைவிட கணக்குகள் தொடர்பில் தங்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் எழுந்த ஐயப்பாடுகள் தொடர்பில் எழுத்து மூலமாக அனுப்பிய போதும் அதற்கான பதில்கள் இதுவரை சமர்ப்பிக்கப் படவில்லை எனத் தெரிவித்துள்ளார்முரசுமோட்டை கமக்கார அமைப்பினுடைய ஆயுட்காலம் இரண்டு வருடங்களாக இருந்தாலும் அதனுடைய நிர்வாகம் மீளமைப்பு செய்யப்படவில்லைஅதாவது கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட நிர்வாகமே தொடர்ந்து இயங்கியது தலைவரது தனிப்பட்ட சில முடிவுகள் அவரது தனிப்பட்ட சில முடிவுகளால் விவசாயிகள் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய மானிய உரம் மற்றும் அத்தியாவசிய தேவைகளை தடுத்தமை தொடர்பிலும் குற்றச்சாட்டுகள் முன் வைகப் பட்டன.இதேவேளை குறித்த கமக்கார அமைப்பினுடைய கணக்கு முறைகேடுகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன அந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த 2019ஆம் ஆண்டு திட்டத்தின் படி 10 லட்சத்து 38 ஆயிரத்து 360 ரூபா நிதி செலவிடப்பட்டது செலவிடப்பட்டது என கமநல சேவை நிலையத்தினை நிலையத்தின் ஊடாக கோரிய விண்ணப்பத்திற்கு அமைவாக தகவல் வழங்கப்பட்டு இருந்தது ஆனால் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த கணக்கு அறிக்கையில் 2019ஆம் 2020 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு மாத்திரம் 5 லட்சத்து 64 ஆயிரத்து 930 ரூபாய் மாத்திரமே செலவிட்டதாக இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க துஇதேவேளை குறித்த கமகர அமைப்பின முன்னைய நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகத் தெரிவு செய்வதற்கு முயற்சித்த போதும் ஏற்கனவே நிர்வாகத்தில் இருந்தவர்களும் ஒருசில விவசாயிகளும் ஏற்படுத்திய குழப்பத்தின் காரணமாக புதிய நிர்வாகத் தெரிவு மேற்கொள்ளப்படவில்லைஎன்பதுடன் முன்னைய நிர்வாகம் இன்றைய பொதுக் கூட்டத்தில் (03-08-2021) முழுமையாக கலைக்கப்பட்டுள்ளது