Category:
Created:
Updated:
பின்லாந்து நாட்டில் மீண்டும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசும் சுகாதாரத் துறையும் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
பின்லாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக அதிகரித்து வருகிறது இதனால் நாட்டில் மீண்டும் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு உள்ளது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மார்ச் 8ஆம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை நாடாளுமன்றம் உள்பட அனைத்து இடங்களும் மூடப்படும் என்றும் அத்தியாவசிய தேவை இன்றி யாரும் வெளியே வரக்கூடாது என்றும் பின்லாந்து அரசு பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.