ஸ்டாலின் பக்கத்திலேயே இருப்பது நல்லது - தி.மு.க., எம்.பி.,க்கள்.
மார்ச், 8ஆம் தேதியிலிருந்து மீண்டும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்க உள்ளது. தி.மு.க. வைச் சேர்ந்த, எம்.பி.,க்கள், இந்த கூட்டத்தில் பங்கேற்க தயங்குகின்றனர்.
'தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டில்லியில் உட்கார்ந்து பயனில்லை' என்கின்றனர். இதற்கிடையே 'நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்கு முன், கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும்' என, லோக்சபா சபாநாயகரும், ராஜ்யசபா தலைவரும் தெரிவித்துள்ளனர். 'தேர்தல் சமயத்தில் தடுப்பூசியா' என பயத்தில அலறுகின்றனராம் தமிழக, எம்.பி.,க்கள்.
'தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி சீட் பிரச்னை இருக்கும் சமயத்தில், டில்லியில் இருப்பது நல்லதல்ல. காங்கிரஸ் தலைவர்களை, நாடாளுமன்றத்தில பார்க்க நேர்ந்தால், இது குறித்து கேட்பர். எனவே, தலைவர் ஸ்டாலின் பக்கத்திலேயே இருப்பது தான் நல்லது என்கின்றனர், தி.மு.க., - எம்.பி.,க்கள்.