Ads
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி
இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16ஆம் திகதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதையடுத்து தமிழகத்தில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதைத்தொடர்ந்து முன்களப் பணியாளர்களுக்கும், தொடர்ந்து போலீசாருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
நேற்று இந்தியா முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் இன்று துவங்குகின்றன. இதற்கான தடுப்பூசி மையம், உச்ச நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படுகிறது. 'உச்ச நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினரில் தகுதி உள்ளோர், தங்கள் விருப்பத்தின் அடிப்படையில், தடுப்பூசிகளை இன்று முதல் போட்டுக் கொள்ளலாம்' என, பதிவாளர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Info
Ads
Latest News
Ads