Category:
Created:
Updated:
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்புக்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில், 79 ஆயிரத்து 422 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 3 ஆயிரத்து 654 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.