Category:
Created:
Updated:
மயக்கம் என்ன படத்திற்குப் பிறகு நடிகை ரிச்சா சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நடிப்பில் இருந்து விலகி, வெளிநாட்டில் மேற்படிப்புக்காக சென்றுவிட்டார். கல்லூரியில் படித்தபோது அவருக்கும், சக மாணவரான ஜோ லாங்கெல்லா என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு 2019 டிசம்பர் மாதம் அவர்களுக்கு அமெரிக்காவில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின்னர் ரிச்சா காதல் கணவருடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். இந்த வருடம் ஜூன் மாதம் குழந்தை பிறக்கவிருக்கும் ரிச்சாவுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.