Category:
Created:
Updated:
முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இரண்டாம் அரையாண்டுக்கான விலை நிர்ணய குழு கூட்டமானது. மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்று(07) பி.ப 2.00மணிக்கு மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.குறித்த கலந்துரையாடலில் தொழிலாளர் கூலி மற்றும் வாகன வாடகை, கட்டட மூலப்பொருட்கள் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.இக் கலந்துரையாடலில் மாவட்ட பொறியியலாளர், சமுர்த்தி பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், திணைக்களங்களின் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தகாரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.