கிளிநொச்சி மாவட்டத்திற்கு கிடைத்த 5000 தடுப்பூசிகளில் ஆசிரியர்களிற்கான தடுப்பூசிகளை ஏற்றும் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளது
கிளிநொச்சி மாவட்டத்திற்கு கிடைத்த 5000 தடுப்பூசிகளில் ஆசிரியர்களிற்கான தடுப்பூசிகளை ஏற்றும் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கொவிட்ட தடுப்பூசி மற்றம் தொற்ற நிலவரம் தொடர்பான ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் குறித்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில்,கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசிகளை ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் திங்கட்கிழமை முதல் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்ற வருகின்றது.திங்கட்கிழமை 60 வயதுக்கு மேற்பட்ட 188 பேர் தடுப்பூசியை பெற்றிருக்கின்றார்கள். நேற்று செவ்வாய்க்கிழமை 766 பேர் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட நிலையில் இன்றைய தினமும் தொடர்ந்து இடம்பெற்ற வருகின்றது.மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவது போன்று தென்படவில்லை. இந்த செயற்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்ற போது மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். கிளிநொச்சி நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதை காணக்கூடியதாக இருக்கின்றது.கிளிநொச்சி மாவட்டத்திற்கு 5000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளது. குறைந்த அளவிலான தடுப்பூசிகளே ஏற்றி முடிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஆசிரியர்களிற்கான தடுப்பூசிகளை ஏற்றும் படியாகவும் அரசாங்கத்தினால் கூறப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக அவர்களிற்கு தடுப்பூசிகளை ஏற்றும் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கு சுகாதார திணைக்களம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிட்டத்தட்ட 18 ஆயிரம் பேர் இருக்கின்றார்கள். 5000 காணாது என்பது வெளிப்படையாகும். முதல் கட்டமாக கிடைத்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் காட்டும் ஆர்வம் மற்றும் விழிப்புணர்வுகளை அடிப்படையாகக்கொண்டு முழுமையாக முடிப்பதற்கு ஏற்புடையதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.