Category:
Created:
Updated:
வவுனியாவில் மூன்று கிராம அலுவலகர் பிரிவிலுள்ள 1000 பேருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது .வவுனியா நகர கிராம சேவையாளர் பிரிவு, இறம்பைக்குளம் கிராம அலுவலகர் பிரிவில் நாளை காலை 9 மணியிலிருந்து 1 மணிவரையும் வவுனியா நகரம் வடக்கு மற்றும் வைரவப்புளியங்குளம் கிராம அலுவலகர் பிரிவிலுள்ளவர்களுக்கு நாளை பிற்பகல் 1 மணியிலிருந்து மாலை 4 மணி வரைக்கும் காமினி மகாவித்தியாலயத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள செல்பவர்கள் அக்கிராமங்களில் வசித்து வருவதை உறுதிப்படுத்தும் குடும்ப அட்டையை எடுத்து செல்லுமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.