Category:
Created:
Updated:
சௌபாக்கிய உற்பத்தி கிராமம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பிரமந்தனாறு கிராமத்தின் உற்பத்தி வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.