சினிமா செய்திகள்
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
Ads
 ·   ·  678 news
  •  ·  17 friends
  • S

    24 followers

கிளிநொச்சி மாவட்டம் வளங்கள் நிறைந்த மாவட்டம் அவ்விதமான நிலையில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாவட்டம் எனும் நிலையிலிருந்து வெளியில் வருவதற்கு அனைவரினது முயற்சியும் முக்கியமானது

கிளிநொச்சி மாவட்டம் வளங்கள் நிறைந்த மாவட்டம் அவ்விதமான நிலையில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாவட்டம் எனும் நிலையிலிருந்து வெளியில் வருவதற்கு உங்கள் அனைவரினது முயற்சியும் முக்கியமானது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தள்ளார்.

கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் கெபாக்கியா உற்பத்தி கிராமம் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,சௌபாக்கியா நிகழ்ச்சிதிட்டத்தின் சௌபாக்கியா கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள சௌபாக்கியா வாரத்தில் இத்திட்டம் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்த உற்பத்தி கிராமம் செயற்திட்டத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.எங்களுக்கு இருக்கின்றதான வளங்களை பயன்படுத்திக்கொண்டு வளங்கள் மூலமாக எங்களது வாழ்க்கையை முன்னெற்றிக்கொள்வதற்கு முனைய வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் தங்களுடைய வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு முனைவோர்களாக இருந்தால் உண்மையாக எங்களுடைய மாவட்டத்தில் வறுமை என்பது நீங்கிப்போகும்.கிளிநொச்சி மாவட்டம் வறுமையில் முதல் நிலையில் உள்ள மாவட்டம் என்பது வசேசித்த விடயம் அல்ல. கிளிநொச்சி மாவட்டம் வளங்கள் நிறைந்த மாவட்டம் அவ்விதமான நிலையில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாவட்டம் எனும் நிலையிலிருந்து வெளியில் வருவதற்கு உங்கள் அனைவரினது முயற்சியும் முக்கியமானதாக இருக்கின்றது.அந்த வகையில் அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற இந்த செயற்திட்டங்களை மிகவும் சிறப்பான வகையில் கொண்டு செல்வதன் ஊடாக உங்களுடைய குடும்பத்தை உயர்த்தக்கூடியதாக இருக்கும் அதேவேளை, கிராமம், பிரதேசம், மாவட்டம் என ஆண்டின் பொருளாதாரத்திற்கு வித்திட்டவர்களாக உங்களால் ஆகக்கூடும்.அந்த வகையில் உங்களிற்கு தரப்பட்டுள்ள அந்த தொகையை சிறிய தொகையாக இருந்தாலும், அதைக்கொண்டு உங்களின் பங்களிப்புடன் முயற்சிகளை மேம்படுத்துவதன் ஊடாக இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்கு வித்திடுபவர்களாக நீங்கள் மாற வேண்டும்.இந்த கிராமத்தை பார்க்கின்றபோது, பிரமந்தனாறு கிராமத்தில் முருங்கை மற்றும் நிலக்கடலை உற்பத்திகளை மேற்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளீர்கள். முருங்கை என்பது தமிழர் பாரம்பரிய உணவுகளில் முக்கிய இடத்தில் உள்ளது. அது நிறைந்த போசாக்கு உள்ளதாகவும் காணப்படுகின்றது. அந்த வகையில் முருங்கை எங்களது போசாக்கு தேவையை நிறைவு செய்வதுடன் மட்டுமல்லாது, ஏற்றுமதிக்குரிய பயிராகவும் அது மாறியிருக்கின்றது. அதற்கேற்ற வகையில் உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டும்.கியூபாவிலே இந்த முருங்கை உற்பத்தியை அதிகமாக செய்வதாக அண்மைக்காலத்திலே நான் அறிந்த விடயம். இந்தியாவிலிருந்து கொண்டு சென்று அவர்கள் அங்கு வளர்த்து அதன் மூலமாக பெரும் பயன்பெற கூடியதாக நிலை மாறியிருக்கின்றது. அவ்வாறு இருக்கின்றபோது எங்களுடைய பிரதேசங்களில் இது இலகுவாகவே வளரக்கூடிய பயிராக இருக்கின்றது. இந்த பயிரை நீங்கள் மேம்படுத்துவதன் ஊடாக உங்களுடைய வாழ்க்கையை மே்படுத்தக்கூடியதாக இருக்கும்.இவ்வாறான வேலைத்திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் நிதியிலிருந்து, நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேறு நபர்களிற்கு வேலை வாய்ப்பை வழங்கக்கூடியதாகவும் இருக்கும். அவ்வாறு அமைந்தால்தான் சமூகத்திற்கும் பிரயோசனமானதாக அமையும். உங்களுடைய செயற்பாடுகள் மென்மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டும் என்பது எமது அவாவாக இருக்கின்றது. அதனை தொடர்ந்து செய்வதன் ஊடாக இந்த செயற்திட்டத்தை வெற்றியடைய செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.உண்மையில் சுய பொருளாதாரத்தை நம்பியிருக்கவேண்டிய காலமாக இது இருக்கின்றது. இப்போது பார்த்தால் இறக்குமதிகளை குறைத்துக்கொண்டு வருகின்றதான நிலைப்பாடு இருக்கின்றது. அவ்விதமான நிலையில் ஏற்றுமதியை ஊக்குவிக்கின்றவர்களாகவும், அதேவேளை எமது சுய தேவைகளை நிறைவு செய்பவர்களாகவும் இருப்பதற்கு உணவு உற்பத்தி அவசியமானதாக அமைந்திருக்கின்றது.அந்த வகையில் உணவு உற்பத்தியினை மேற்கொள்கின்றதான இந்த உற்பத்தி கிராமம் எனும் செயற்திட்டம் தொடர்ந்து சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு உங்களுடைய வாழ்வாதாரம் சிறப்புறவும், மாவட்டத்தின் பொருளாதாரம் வளம்பெறவும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் இதன்போது கருத்து தெரிவித்தார்.

  • 935
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads