Category:
Created:
Updated:
தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கலைஞர்களும் சிறு கை வினைப்பொருள் உற்பத்தியாளர்களும் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்வதில் பெரும் கஷ்டங்களை எதிர் நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.கைவினைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் கலைஞர்கள் தற்போதைய கொவிட் காரணமாக வருமானங்களை இழந்துள்ளனர்.இவ்வாறானவர்கள் சுற்றுலா பயணிகளின் வருகை இன்மை காரணமாக தொழில் வாய்ப்புகளை இழந்தனர் குறிப்பாக கைப்பணிப் பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் தற்போது பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.குறிப்பாக இவருடைய கைவினைப்பொருட்கள் கடந்த காலங்களில் பல்வேறு இடங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போதைய கொவிட்அச்சுறுத்தல் காரணமாக இந்த தொழில் நடவடிக்கைகள் கைவினைப் பொருட்களை விற்பனை இல்லாத நிலையில் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.