முல்லைத்தீவு கோட்டை கட்டிய குளம் மற்றும் அம்பல பெருமாள் குளம் ஆகிய பகுதிகளில் அறுவடை செய்யும் நெல்லுக்கு உரிய விலையின்மை விவசாயிகள் பாதிப்பு
முல்லைத்தீவு கோட்டை கட்டிய குளம் மற்றும் அம்பல பெருமாள் குளம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கை அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லை குறைந்த விலைகளில் விற்பனை செய்ய வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள கோட்டை கட்டிய குளம் மற்றும் அம்பல பெருமாள் குளம் ஆகிய குளங்களின் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக செய்கை தற்போது அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அறுவடை செய்யும் நெல்லுக்கு உரிய விலையின்மை காரணமாக தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.அதாவது ஏனைய பிரதேசங்களில் அறுவடை செய்யும் நெல்லை தனியாருக்கோ அல்லது நெல் சந்தைப்படுத்தும் சபைக்கோ விற்பனை செய்வதற்கு உரிய போக்குவரத்து வசதிகள் போக்குவரத்து பாதைகள் சீராக இருப்பதனால் அவற்றை விற்பனை செய்யக்கூடியதாக இருக்கும் ஆனால் எங்களுடைய பிரதேசத்தில் உரிய போக்குவரத்து வசதிகள் இன்மை பாதைகள் சீரின்மை காரணமாக தமது பிரதேசத்தில் உள்ள தங்களிடம் வியாபாரிகள் மிக குறைந்த விலைகளில் நெல்லைக் கொள்வனவு செய்வதுடன் மூடை ஒன்றுக்காக 75 கிலோ 76 கிலோ என்ற அடிப்படையிலே நெல்கொள்வனவு செய்யப்படுவதாகவும் தற்போது சிகப்பு நெல் ஒரு மூட்டைக்கு 76 கிலோ என்ற அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுவதுடன் இதற்கான விலையும் 3,750 ரூபாய்க்கு கொள்வனவு செய்தாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இந்தப் பயிர்செய்கை மேற்கொள்ளும்போது கிருமிநாசினிகள், களைநாசினிகள், உரம் என்பன தட்டுப்பாடு காரணமாகவும் தங்கள் பாதிக்கப்பட்டதுடன் அதிகூடிய விலைகளில் இவற்றை பெற்று நெற்செய்கை மேற் கொண்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்முல்லைத்தீவு வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள அப்பெருமாள் குளத்தின் கீழ் 360 ஏக்கர் நிலப்பரப்பிலும் கோட்டைகட்டிய குளத்தின் கீழ் 210 ஏக்கர் நிலப்பரப்பிலும் சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடை ஆரம்பிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.