Category:
Created:
Updated:
கிளிநொச்சியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கான கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று ஆரம்பமானது.
குறித்த தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று காலை 9 மணி முதல் இணைமடு சாந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் ஆரம்பமானது.கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி. ரணசிங்கவின் கோரிக்கைக்கு அமைவாக இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு பொது மக்களிற்கு ஏற்றும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.நேற்றும் இன்றும் குறித்த வைத்தியசாலையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கு கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெறவுள்ளது.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் அழைத்து வரப்பட்டு அவர்களிற்கான தடுப்பூசிகள் நேற்று செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.