பாண்டியன்குளம் கரும்புள்ளியான் கிராமத்தில் இன்று சௌபாக்கியா உற்பத்தி கிராமம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பாண்டியன்குளம் கரும்புள்ளியான் கிராமத்தில் இன்று (03-07-2021)சௌபாக்கியா உற்பத்தி கிராமம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.சௌபாக்கியா உற்பத்தி கிராமம் வறுமை ஒழிப்போம் திட்டமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் பாண்டியன்குளம் கரும்புள்ளியான் கிராமத்தில் இன்று(03) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தி வேலைத்திட்டமாக அமையப்பெறவுள்ள குறித்த திட்டத்தினை பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்கள் கலந்து கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.மேலும் இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், சௌபாக்கியா அவிபிருத்தி திட்டத்தின் மாவட்ட செயலக விடய அலுவலர், கிராம சேவகர், உத்தியோகத்தர்கள் மற்றும் திட்ட பயனாளிகள் முதலானோர் கலந்து கொண்டனர்.