பழைய முறிகண்டி கிராமத்தில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையயில் குடும்பங்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றன.
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபைக்குட்பட்ட பழைய முறிகண்டி கிராமத்தில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையயில் 35 வரையான குடும்பங்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றன.முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியாக காணப்படுகின்ற பழைய முறிகண்டி கிராமத்தில் உள்ள குடிநீர் கிணறுகள் யாவும் உவர் நீராக மாறி இருப்பதனால் இந்த பிரதேசத்தில் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக இந்தப் பிரதேசத்தில் உள்ள பொதுக் கிணறு ஒன்று மாத்திரமே குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது அதுவும் ஓரிரு மாதங்களுக்கு மாத்திரமே நீரைப் பெற்றுக் கொள்ள கூடியதாக இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.தமது கிராமத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள புத்து வெட்டுவான் கிராமத்திற்குச் சென்று அங்கே உள்ள காளி கோவில் ஆலய கினற்றிலிருந்தே குடிநீரை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே தங்களுடைய பிரதேசத்துக்கு பிரதேச சபையின் ஊடாக குடிநீர் வழங்குவதாக பலதடவைகள் வாக்குறுதி அழித்துவிட்டு ஆனால் அவர்கள் இந்த குடிநீரை வழங்குவதில்லை என்றும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.குறிப்பாக இந்தப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு ஓரிரு மாதங்களுக்கு மாத்திரம் குடிநீரை வழங்கிவிட்டு ஏனைய காலங்களில் குடிநீர் வழங்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.எனவே பின்தங்கிய பிரதேசமாக காணப்படுகின்ற தமது கிராமத்தில் குறிப்பாக போக்குவரத்து வசதிகள் இன்மை காட்டு யானைகளின் தாக்கம் அதைவிட குடிநீருக்கு தட்டுப்பாடு என பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து இந்த விவசாய கிராமத்திலேயே வாழுகின்ற நிலைமை இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.