வடக்கில் இன்றிலிருந்து கள்ளுத் தவறணை திறக்க அனுமதி.
வடக்கு மாகாணம் பூராகவும் இன்றிலிருந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கள்ளுத் தவணை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்தி சபை தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே கிரிசாந்த பத்திராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,கொரோனா நிலைமை காரணமாக சகல கள்ளு தவறனைகளும் மூடப்பட்டிருந்தது இதன் காரணமாக கள் விநியோகமும் பாதிக்கப்பட்டிருந்தது.
தற்போது மதுவரித் திணைக்களத்தினால் விசேட அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது அதாவது கள்ளினை போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கு
குறித்த முயற்சியை மேற்கொண்ட எமது ராஜாங்க அமைச்சர் மற்றும் மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்மைய நாட்களில் பொதுமக்களால் எனக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பப்பட்டிருந்தது அதாவது கள்ளு தவறனைகளை திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு.
குறித்த விடயம் தொடர்பில் உடனடியாகவே மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திற்கு அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தோம் ஆனால் அதற்கு சில நிபந்தனைகளுடன் வடக்கில் தவணைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார்
தவறனை திறக்க முடியும் ஆனால் மக்கள் தவறணைகளில் பொதுமக்கள் கள் அருந்த முடியாது அத்தோடு அந்த பகுதியில் ஒன்று கூடி நிற்க முடியாது எனவும் சுகாதார நடைமுறையை பின்பற்றி கள் விற்க முடியும்
அத்தோடு பொது மக்கள் அவ்விடத்தில் ஒன்று கூட முடியாது தவறணைகளில் நின்று கள்ளினை அருந்த முடியாது தவறணை களுக்கு முன்னால் ஒன்று கூட முடியாது என நிபந்தனைகளுடன் தவறணைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த அனுமதி இணை சரியான முறையில் பயன்படுத்தி செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்