Category:
Created:
Updated:
இலங்கைக்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் பணிப் பெண்கள் இலங்கை திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனாவினால் தொழில் வாய்ப்பை இழந்து கவனிப்பாரற்ற நிலையில் சொந்த நாட்டிற்கு செல்லமுடியாமல் பல நாட்களாக அகதியை போல் வெளிநாட்டு தூதரகங்களுக்கு முன்னால் காத்துக் கிடப்பதாக அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனினும், குவைத்திற்கான இலங்கை தூதரகம் இவர்களை கண்டுகொள்ளாது, கைவிட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கிய பங்காளிகளான வெளிநாட்டு வீட்டுப் பணிப் பெண்களின் இந்த நிலை கவலையளிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.