சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  678 news
  •  ·  17 friends
  • S

    24 followers

ஜனாதிபதி, பிரதமருக்கு ஆதரவாக மன்னாரிலிருந்து சாக்கு சாமியார் நடைபயணம்.

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை காலை மன்னாரில் இருந்து கொழும்பிற்கான பாத யாத்திரையை மன்னாரைச் சேர்ந்த ‘சாக்கு சாமியார்’ என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பர் கிருஸ்ணன் டயஸ் ஆரம்பித்துள்ளார்.

இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு எம் நாட்டு மக்களிடம் இன மத ஒற்றுமை, மக்கள் மத்தியில் சாந்தி சமாதானம் நிலவவும் குறிப்பாக கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக தங்களை அர்பணித்து வரும் சுகாதார தரப்பினர், ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு படையினர் உற்பட அனைவரும் உடல் உள நலம் வேண்டியும் இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டும் பாதயாத்திரை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை சுதந்திர தினமான வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திலிருந்து தனது பாத யாத்திரையை ஆரம்பித்தார்.

இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை, மற்றும் மதத்தலைவர்களின் ஆசியுடன் தனது பாய யாத்திரையை ஆரம்பித்தார்.  இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல், பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உற்பட அதிகாரிகள் இணைந்து பாதயாத்திரையை ஆரம்பித்து வைத்தனர்.

குறித்த பாதயாத்திரையானது சுமார் 40 நாட்கள் இடம் பெறும். நாள் ஒன்றிற்கு சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் வரை பாத யாத்திரிகையை மேற்கொள்ளுவார். செல்லும் வழிகளில் உள்ள முக்கிய மதஸ்தலங்களை தரிசித்து செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர் கொழும்பிலுள்ள ஒரு முக்கிய பௌத்த மதத் தளத்தை அடைந்து தனது பாதயாத்திரையை நிறைவு செய்ய இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரத் தினத்தை முன்னிட்டு மன்னார் தள்ளாடி புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து 41 நாட்கள் நிலத்திற்கு சாக்கு விரித்து அனுராதபுரம் வரைக்கும் உருண்டு சென்றார்.

அதனைத் தொடர்ந்து 2 ஆவது தடவையாக கடந்த ஆண்டு (2020) சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் தீவு நுழைவாயில் பகுதியில் 50 நாட்கள் பேசாமலும் உண்ணாமலும் பிற்பகல் மட்டும் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட சிறிதளவு பசும் பால் அருந்தி தவம் இருந்தவர்.

இந்த நிலையில் 3 ஆவது தடவையாக இவ்வருடம் (2021) மன்னாரில் இருந்து கொழும்பிற்கான பாத யாத்திரையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • 659
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads