Category:
Created:
Updated:
ஒண்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் இன்று தனது புதிய அமைச்சரவை உறுப்பினர்களை அறிவிக்க உள்ளார்.
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பிறகு, அவர் தனது அமைச்சரவையை அமைக்க உள்ளார்.
ஒண்டாரியோ மியூசியத்தில் நடைபெறும் விழாவில், முதல்வரும் அவரது அமைச்சரவையும் பதவியேற்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
பொதுவாக அமைச்சரவை மாற்றம் பற்றிய விபரங்களை முன்கூட்டியே தெரிவிக்கும் வழக்கம் இருக்கின்றது. ஆனால், ஃபோர்ட் செவ்வாய்க்கிழமை இதுகுறித்து எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை.