Category:
Created:
Updated:
கனடா மத்திய அரசு நுகர்வோர் மீதான கார்பன் வரியை (Consumer Carbon Tax) ரத்து செய்யும் முடிவு எடுத்திருந்தாலும், ஒன்டாரியோ மாநில அரசு எரிபொருள் வரி குறைப்பை நிரந்தரமாக்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யாது என மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford) அலுவலகம் உறுதி செய்துள்ளது.
2022-ஆம் ஆண்டு ஜூலையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட லீற்றர் 5.7 சதங்கள் குறைப்பு, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒன்டாரியோவில் எரிபொருள் வரி லீற்றருக்கு 14.7 சதங்கள் குறைக்கப்பட்டது.
தற்போது, இந்தக் குறைப்பை நிரந்தரமாக்கும் முடிவை ஃபோர்ட் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) நுகர்வோர் கார்பன் வரியை நீக்குவதாக அறிவித்தார்.