கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் போர்த்துக்கலில் ஜனாதிபதி தேர்தல்
போர்த்துக்கல்லில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நிலையிலும் பெருமளவிலானவர்கள் இன்று புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.
மத்திய வலதுசாரி சமூக ஜனநாயகக் கட்சியின் தற்போதைய ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சௌசா மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இறுக்கமான பல சுகாதார நடவடிக்கைக்கு மத்தியிலும் தேர்தலில் வாக்களிக்க பெருமளவிலான மக்கள் ஆற்வம் காட்டியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வாரம் மூன்றில் இரண்டு பங்கு போர்த்துகீசியர்கள் தொற்றுநோய் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்க வேண்டும் என கருத்து கணிப்பு ஒன்றில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் தனிமைப்படுத்தலில் இருப்பதனால் 60-70% வாக்குப்பதிவு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.