
முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் சிறீதரனுக்கு இல்லையாம்
தலைமைப் பதவி மற்றும் நாடாளுமன்ற பவி ஆகியவற்றில் பல்வேறு ஈழுபறி நிலையில் இருக்கும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் தமக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபை தேர்தல் நடாத்துவதாக இருந்தால் தேர்தல் திருத்தம் முதலில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் தனிநபர் பிரேரணைகூட கொண்டுவரப்பட்டிருந்தது.
ஆனால் 50 வீதம் தொகுதி மற்றும் விகிதாசார முறைக்கு தென்னிலங்கையிலும் கடும் எதிர்ப்பு வந்தது. இவ்வாறான இழுபறி நிலையில் மாகாண சபை தேர்தல் உள்ளது எனத் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் மாகாண சபை தேர்தல் நடந்தால் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்க தாம் தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுற்ற சுமந்திரன் அந்த பதவியில் தான் மீண்டும் வருவதற்கான முயற்சியை முன்னெடுத்து வருவதாகவும் அதன் ஒரு வெளிப்பாடாகவே சிறீதரனை மாகாணசபை தேர்தலில் போட்டியிட வைக்க முயற்சிப்பதாகவும் இதன் உட்சூட்சமத்தை அறிந்ததாலேயே சிறீதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார் எனவும் பலர் சுட்டிக்காட்டியிருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000