Category:
Created:
Updated:
அனலைதீவு கடற்பகுதியில் வைத்து 211 கிலோ 300 கிராம் எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் இன்றையதினம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து கேரளக் கஞ்சாவினை எடுத்து வந்தவர்களிடம், கடற்பகுதியில் வைத்து கைமாறி வாங்கி வரும்போது கடற்பகுதியில் வைத்து அதிகாலை 4.00 மணியளவில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பேசாலை மற்றும் காரைநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளின் பின்னர் அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
000