
காற்றாலை மின் திட்டம் தொடர்பாக புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது - முன்னாள் ஜனாதிபதி ரணில்
இந்தியாவுடனான முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டம் தொடர்பாக புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க காத்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய தலைநகர் புதுடில்லியில் நடைபெற்று வரும் 'NXT சர்வதேச மாநாட்டில்' பங்கேற்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு நடைபெற்ற பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தப் பயணத்தின் போது, ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து கலந்துரையாடினார்.
மாநாட்டின் இறுதியில் நடைபெற்ற நேர்காணலில் பேசிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது
பிரதமர் மோடியும் நானும் எங்கள் ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து ஒன்றாக விவாதித்தோம். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை இந்தியாவிற்கு விற்பனை செய்வதே எங்கள் முக்கிய யோசனையாக இருந்தது. நாங்கள் 25 அல்லது 50 ஜிகாவாட் வழங்க முயற்சித்தோம்.
இரண்டாவதாக, திருகோணமலையை ஒரு பிராந்திய திட்டமிடல் மையமாக மாற்றுவது. நாங்கள் அந்த இடத்தில் ஒரு சுத்திகரிப்பு நிலையத்தைக் கட்டி, நாகப்பட்டினத்திலிருந்து வரும் எண்ணெய் குழாய் வழியாக அதை மேம்படுத்த திட்டமிட்டோம்.
அந்த திட்டத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை நாம் பார்க்க வேண்டும். நாம் அதை தமிழ்நாட்டின் மதுரை வரை இணைக்க வேண்டும்.
துரதிஷ்டவசமாக, எங்கள் முதல் திட்டமான காற்றாலை மின் திட்டத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. அந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். புதிய அரசு என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க நாங்கள் காத்திருக்கிறோம். என தெரிவித்தார்
000