சினிமா செய்திகள்
எஸ்பிபி பற்றி பகிர்ந்து கொண்ட நடிகர் பிரபு
சமீபத்தில் நடிகர் பிரபுவின் பேட்டி ஒன்றில் எஸ்பிபி பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார் நடிகர் பிரபு.'அடிமைப்பெண்' படம் வந்த சமயத்தில்
பாடகி ஸ்ரேயா கோஷல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
நடிகை ஸ்ரேயா கோஷல் இந்திய அளவில் பிரபலமான பாடகியாக இருந்து வருகிறார். அவரது குரலுக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.தற்போது அவர் இன்ஸ்டாவில் வெளியிட
கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு - தமன்னாவின் அறிக்கை
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபத்தை கொடுப்பதாக கூறி, புதுச்சேரியை சேர்ந்த 10 பேரிடம் ரூ. 60 கோடியே 60 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.இத
பல கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள கண்ணப்பா படத்தின் டீசர் 2 இதோ .....
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடித்து உருவாகியுள்ள திரைப்படம் கண்ணப்பா. இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியவரும் ஹீரோ விஷ
பிரபல ஹாலிவுட் நடிகர்  ஜீன் ஹேக்மேன் மர்ம மரணம்
ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் ஜீன் ஹேக்மேன்.. 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜீன் ஹேக்மேன் இரண்டு முறை ஆஸ்கார் விருதும் வென்றுள்
கேப்டன் விஜயகாந்த் பற்றிய கூறிய பொன்னம்பலம்
ஒருநாள் கேப்டனின் சண்டைக்காட்சி. ஹிந்தி வில்லன் வரவில்லை என்பதால் ஷூட்டிங் கேன்சல் ஆகி வெளியே வந்து கொண்டிருந்தார் கேப்டன். நான் ஒரு ஓரமாக பான் பராக்
நகைச்சுவை சக்கரவர்த்தி தங்கவேலு
1971-ல் ஆனந்த விகடனில் வந்த பேட்டிகேள்வி- " நீங்கள் இருவரும் இப்போதெல்லாம் படங்களில் ஏன் நடிப்பதில்லை ? நீங்களாக ஒதுங்கிவிட்டீர்களா? அல்லது திரையுலகம்
‘ரன்னர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
நடிகர் பாலாஜி முருகதாஸ் தனது திறமையான நடிப்பின் மூலம் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார். குறிப்பாக சமீபத்தில் வெளியான 'ஃபயர்’ திர
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி
யேசுதாஸ், கடந்த சில நாட்களாகவே பெரிதாக இசை உலகில் ஆக்டிவாக இல்லை. 85 வயதாகும் இவர், தற்போது உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்
 L2 : எம்புரான் படத்தில் இணைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்
மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'L 2: எம்புரான்' எனும் திரைப்படத்தில் 'கேம் ஆப் த்ரோன்ஸ்' மற்று
கோடிகளை கொட்டியும் சொதப்பும் அனிருத்; சீப் அண்ட் பெஸ்டாக மாஸ் காட்டும் ஜிவி
தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு இசையும் முக்கிய காரணம். இளையராஜா தொடங்கி அனிருத் வரை இங்கு இசையில் கோலோச்சிய பிரபலங்கள் ஏராளம். குறிப்பாக 90ஸ் வரை இளையர
சிவாஜிக்கு சம்பளத்தை அள்ளிக்கொடுக்க சொன்ன ரஜினி
சிவாஜி கணேசனின் கடைசி படமான, படையப்பா படத்தில் நடிகர் திலகம் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது.படையப்பா படத்தில் சிவாஜி கணேசன
Ads
 ·   ·  2617 news
  •  ·  1 friends
  • 1 followers

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒன்றிணைவு - மக்கள் நலன் கூட்டு என்றால் பங்காளிப்பேன் - டக்ளஸ்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் பேசுவதற்கு உத்தியோபூர்வமாக எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மக்கள் நலனுக்காக ஒன்றிய அழைப்பு விடுத்தால் எனது பங்களிப்பு நிச்சயாமிருக்கும் என தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை தலைமை தாங்கிய இயக்கங்களின் ஒன்றிணைவு தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேம சந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - நான் இன்றிலிருந்து இன்று வரை தமிழ் மக்களின் நலன் சார்ந்து எனது அரசியல் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறேன் என்பது யாவரும் அறிந்த விடயம்.

தமிழ் மக்களின் அரசியல் அபிவிருத்தி மற்றும் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதே எனது அரசியல் அவா.

துரதிஷ்டவசமாக பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் தமிழ் கட்சிகளின் ஒத்துழைப்பு உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தினால் மக்களுக்கான தீர்வினை எட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

தற்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலை தமிழ் கட்சிகள் ஓரணியில் எதிர்கொள்வதா அல்லது தேர்தலின் பின்னர் ஓரணியில் செயல்படுவதா என்ற விவாதம் இடம்பெற்று வருகின்றன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தமிழ் கட்சிகள் எதிர்கொள்வது தொடர்பில் என்னுடன் சிலர் பேசினார்கள் அது நட்பு நீதியாக இடம்பெற்றதே தவிர உத்தியோபூர்வமாக பேசுவதற்கோ கலந்துரையாடுவதற்கோ எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தலை பொருத்தவரையில் ஒற்றுமை என்கின்ற விடயம் தமிழ் மக்களின் நலன் சார்ந்து கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை அல்லது ஒன்றிணைவு இருக்க வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு.

கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தொங்கு சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவை வழங்கியது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் யாழ் மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்கி இமானுவேல் ஆனல்ட முதல்வர் ஆனார்.

அதேபோன்று யாழ் மாநகர சபையில் விஸ்வலிங்கம் மணிவண்ணுக்கு ஆதரவு வழங்கி அவரை முதல்வராக தெரிவு செய்வதற்கு உதவினோம்.

அதுமட்டுமல்லாது வேறு பிரதேச சபைகளிலும் மக்கள் நலன் சார்ந்த வரவு செலவுத் திட்டங்கள் முன்வைக்கப்படும்போது பாதீட்டை தோற்கடிக்காமல் வெற்றி பெறுவதற்கு எமது கட்சி பங்களிப்பை வழங்கியுள்ளது.

தற்போது எமது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் தயார்படுத்தல்களில் ஈடுபட்டு வருகின்றது

ஆகவே தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மக்கள் நலனுக்கான ஒன்றிணைவு அவசியம் என கருதும் பட்சத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தயாராக இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

  • 716
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads