Category:
Created:
Updated:
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (27) இந்தியாவின் புது டெல்லிக்கு, உலகளாவிய பிரச்சினைகள் குறித்து முக்கிய உரையை நிகழ்த்துவதற்காக புறப்பட்டுச் சென்றார்.
இந்த உரை புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், சர்வதேச இராஜதந்திரிகள் பங்கேற்புடன் இன்று (28) நடைபெறுகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் மற்றும் முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் இந்த நிகழ்வில் உரையாற்றவுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி இந்தியாவிற்கு மேற்கொள்ளும் மூன்றாவது விஜயம் இதுவாகும். மார்ச் 2 ஆம் திகதி நாடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
000