
ரூ. 3 லட்சம் கோடி வருவாயை ஈட்டிய மகா கும்பமேளா
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் தொடங்கிய மகா கும்பமேளா 45 நாட்கள் நடந்த நிலையில், நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த மகா கும்பமேளாவில் சுமார் 65 கோடி பக்தர்கள் பங்கேற்று புனித நீராடியுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.2 முதல் 3 லட்சம் கோடி வரை வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகா கும்பமேளா என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் புனித நிகழ்வாகும். இந்தாண்டு அது ஜனவரி 13 முதல் பிரயாக்ராஜ் நகரில் நடந்தது.
மகா கும்பமேளா மொத்தம் 45 நாட்கள் இந்த மகா கும்பமேளா நடந்த நிலையில், நேற்று பிப்ரவரி 26ம் தேதியுடன் மகா கும்பமேளா நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று மட்டும் பல லட்சம் பேர் புனித நீராடினர். ஒட்டுமொத்தமாக மகா கும்பமேளாவில் 65 கோடி பக்தர்கள் பங்கேற்று இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல பொருளாதார ரீதியாகவும் மகா கும்பமேளா மிகப் பெரிய நிகழ்வாகவே இருந்துள்ளது.
உத்தரப் பிரதேச அரசு இதன் மூலம் பெரியளவில் வருவாயைப் பெற்றுள்ளது. இது உபி மாநிலம் விரைவாக 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய உதவும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "மகா கும்பமேளாவை நாங்கள் சிறப்பாக நடத்திக் காட்டியுள்ளோம். உத்தர பிரதேசத்தின் திறனை மகா கும்பமேளா எடுத்துக் காட்டுவதாக உள்ளது.. மகா கும்பமேளா உத்த பிரதேசத்தின் பொருளாதாரம் ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் வளர உதவும்" என்று கூறியிருந்தார்.
இந்த மகா கும்பமேளாவில் சுமார் 65 கோடி பேர் பங்கேற்றுள்ளனர். இதுவரை நடந்த மகா கும்பமேளாக்களில் இவ்வளவு கோடி பக்தர்கள் பங்கேற்றது இல்லை. மகா கும்பமேளா என்பது மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பங்களித்துள்ளதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோரும் இதன் மூலம் பலன் பெற்றுள்ளதாக அகில இந்திய வர்த்தகர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தாண்டு நடந்த மகா கும்பமேளாவில் நான்கு கிரகங்களின் ஒரே கோட்டில் வந்திருந்தது. இது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே பக்தர்கள் அதிகளவில் திரண்டனர். பல பாலிவுட் பிரபலங்கள், அரசியல் தலைவர்களும் கூட இதில் புனித நீராடினர்.. இந்த நிகழ்வுக்கு வரும் பக்தர்களுக்காகக் கூடாரங்கள், கழிப்பறைகள், உணவு கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.