Category:
Created:
Updated:
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் உரிய தினத்தில் நடத்துமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்றையதினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளன.
பதிவு செய்யப்பட்ட 13 கட்சிகளின் செயலாளர்கள் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் பாதீடு விவாதம் மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை என்பன நடைபெறவுள்ளன.
எனவே, இவற்றைக் கருத்திற் கொண்டு உரிய தினத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000