![](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி
ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் நேற்றையதினம் (12) கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன.
விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு, ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டு, அணிநடையுடன் நிகழ்வானது ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து சுவட்டு நிகழ்வுகள் ஏனைய நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
கல்லூரியின் முதல்வர் எம்.அன்ரன் அமலதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக தீவக கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் செல்லையா இளங்கோ அவர்களும், சிறப்பு விருந்தினராக மரியதாஸ் டினோசன் அவர்களும், கௌரவ விருந்தினராக ஊர்காவற்துறை மக்கள் வங்கியின் முகாமையாளர் திருமதி சசிகலா கவீஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன், ஆசிரியர்கள், அயற்பாடசாலை அதிபர்கள் - ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
000