தண்டம் விதித்த பொலிசார் – எட்டி உதைத்த வவுனியா ஓட்டுநர்
வவுனியாவில் க்ளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் முச்சக்கர வண்டி சாரதிக்குத் தண்டப்பணம் விதிக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த முச்சக்கரவண்டி சாரதி தனது வாகனத்தின் மேலதிக பாகங்களைத் தனது காலால் உதைந்து உடைத்து எறிந்த சம்பவம் ஒன்று வவுனியாவில் நேற்று பதிவாகியுள்ளது .

'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் ஓர் அங்கமாக முச்சக்கரவண்டி, பேரூந்து உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக பாகங்களை அப்புறப்படுத்துமாறு பொலிஸார் தெரித்துள்ளனர். அவற்றினை அகற்றுவதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது .
வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் கிளீன் சிறீலங்கா திட்டத்தினை வவுனியா போக்குவரத்து காவல்துறையினர் முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, அப்பகுதியினூடாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றினை வழிமறித்த காவல்துறையினர் முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டிருந்த மேலதிக உதிரிப்பாகங்களை அகற்றுமாறு தெரிவித்திருந்தனர். தண்ட குற்றப் பத்திரத்தையும் வழங்கியிருந்தனர்.
இதனால் அதிருப்தி அடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி காவல்துறையினரின் முன்னிலையிலேயே இந்த உதிரிப்பாகங்களைக் காலால் அடித்து உடைத்து, ஏனைய பாகங்களைக் கழற்றி வீசியுள்ளமை குறிப்பிடத்தக்கது
00