சமுர்த்தி பயனாளியாக தெரிவானவர்களிற்கான கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிற்கு அரசினால் வழங்கப்படும் 5000 ரூபா கண்டாவளை பிரதேசத்தில் ஆரம்பமானது. குறித்த கொடுப்பனவு சமுர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டவர்களிற்கு முதல் கட்டமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நாடளாவிய ரீதியில் இன்று முதல் 5000 ரூபா வழங்கும் திட்டம் நடைமறைப்படுத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளியாக தெரிவானவர்களிற்கான கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது.கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த ஆரம்ப நிகழ்வு புளியம்பொக்கனை பிரதேசத்தில் இடம்பெற்றது.இதன்போது 10 பேருக்கு பணத்தொகை வழங்கி வைக்கப்பட்டதுடன், ஏனையவர்களிற்கான கொடுப்பனவுகள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.