கிளி-நோயாளர்களிற்கு மேற்கொள்ளப்படும் அன்டியன் பரிசோதனை மேற்கொள்வதற்கான தற்காலிக கொட்டகைகள் கையளிப்பு
வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்களிற்கு மேற்கொள்ளப்படும் அன்டியன் பரிசோதனை மேற்கொள்வதற்கான தற்காலிக கொட்டகைகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த அங்கயன் இராமநாதனிடம் வைத்தியசாலை பணிப்பாளரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக முதல் கட்டமாக தற்காலிக கொட்டகைகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைகளிற்காக வருகை தரும் நோயாளர்களிற்கு அன்டியன் பரிநோதனை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில், அதன் முடிவுகள் கிடைக்கும் வரையும் காத்திருப்பதற்கும், குறித்த பரிசோதனைக்குமான இட வசதி போதாது காணப்படுவதாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது.அதற்கு அமைவாக தற்காலிக கொட்டகை வசதியை மேற்கொண்டு தருவதாக அங்கயன் இராமநாதன் உறுதியளித்திருந்தார். குறித்த கொட்டகைகளின் முதல் தொகுதி இன்று அங்கயன் இராமநாதனின் கிளிநொச்சி மாவட்ட அணைப்பாளர் நந்தகுமார் மற்றம் பிரதேச சபை உறுப்பினர்களினால் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
மற்றமொரு தொகுதி எதிர்வரும் நாட்களில் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.