Category:
Created:
Updated:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர், தமிழக மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்யவில்லை. தமிழகத்துக்கு உடனடியாக 50 லட்சம் தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும்.
தமிழக அரசு ஒரு கோடி தடுப்பூசி டோஸ் கேட்டிருந்த நிலையில் 42 லட்சம் தடுப்பூசி டோஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.